loader
மூ (MU)  கொரோனா திரிபு மலேசியாவில் கண்டறியப்பட்டதா?

மூ (MU) கொரோனா திரிபு மலேசியாவில் கண்டறியப்பட்டதா?

கோலாலம்பூர், அக் 1: மலேசியாவில் கொரோனா கிருமியின் 'மூ' (MU) என்ற திரிபு கண்டறியப்பட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல என மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக வெளியான ஊடகச் செய்தியில், இந்தோனேசிய மருத்துவர் ஒருவர் இந்தத் திரிபு மலேசியாவில் கண்டறியப்பட்டதாக எச்சரிக்கை விடுத்தார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுபோன்ற பொய்யான தகவல்களை யாரும் பரப்பக்கூடாது என சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இதனால் மக்கள் மத்தியில் குழப்பமும் பதற்றமும் ஏற்படும் என அந்த அமைச்சு கூறியுள்ளது!

0 Comments

leave a reply

Recent News