loader
சங்கீதாவும் இல்லை; ஜாஸ்மினும் இல்லை... புதிய நாயகியுடன்  டெனிஸ் குமார்!

சங்கீதாவும் இல்லை; ஜாஸ்மினும் இல்லை... புதிய நாயகியுடன் டெனிஸ் குமார்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜூலை-2

'வெடிகுண்டு பசங்க' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, புதிய கூட்டணியில் அடுத்த படத்திற்குத் தயாராகிவிட்டார் வசூல் நாயகன் டெனிஸ் குமார்.

இதற்கு முன் மைக்கல் ஜாஸ்மின், சங்கீதாவுடன் டூயட் பாடிய டெனிஸ், தற்போது புதிய கதாநாயகியுடன்  இணையவிருக்கிறார். படத்தின் தலைப்பு 'தமிழ்' என்ற வார்த்தையில் தொடங்கும் என்றும், அதைக் கொஞ்சம் கண்டுபிடியுங்களேன் என்றும் சஸ்பென்ஸ் வைக்கும் டெனிஸ் குமார், எதிர்வரும் ஜூலை 5-ஆம் தேதி நடக்கவிருக்கும் படபூஜையில்  படத்தின் தலைப்பு முழுமையாக வெளியிடப்படும் என்கிறார். மலேசிய சினிமா உலகத்திற்கு படத்தின் தலைப்பு ஓரளவு தெரியும். ஆனால் நாயகிதான் யார்? என்று எல்லாரும் ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.  மேலும், டெனிஸ் கூட்டணியில் இணையும் இயக்குனரும் புதியவர் என்று கூறுகின்றனர்.

யார் அந்தப் புதிய நாயகி? உங்களுக்குத் தெரியுமா? கண்டுபிடியுங்கள் எனக் கூறுகிறார்  டெனிஸ் குமார்!

0 Comments

leave a reply

Recent News