loader
18 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரில் இதுவரை 4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு!

18 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரில் இதுவரை 4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு!

கோலாலம்பூர், செப் 30: மலேசியா முழுவதும் உள்ள 18 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரில் இதுவரை 4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரமாக இருந்தது என்று இன்று தாம் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

நடப்பாண்டு இந்தப் பிரிவினரில் 67 பேர் உயிர் இழந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர் கைரி, கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது அனைவரது கடமை என்றார்.

மேலும் இதை மனதிற்கொண்டே அரசாங்கம் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

இந்தப் பிரிவினரில் இதுவரை 43 விழுக்காட்டினருக்கு, அதாவது 1,352,870 பேருக்கு இதுவரை ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டுள்ளது, என்றார் அவர்.

0 Comments

leave a reply

Recent News