loader
கெந்திங் மலை - தியோமன் தீவு திறக்கப்படுவது  நிறுத்தி வைப்பு!

கெந்திங் மலை - தியோமன் தீவு திறக்கப்படுவது நிறுத்தி வைப்பு!

கோலாலம்பூர், செப் 29: கெந்திங் மலை மற்றும் தியோமன் தீவு ஆகிய இரு இடங்களும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படுவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பகாங் சுற்றுலாக் கழகத்தின் பொது மேலாளர் கமாருடின் இப்ராஹிம் தெரிவித்தார்.

அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து இவ்விரு சுற்றுலாத் தலங்களும் நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளின் வருகைக்காக திறக்கப்பட இருந்தன.

எனினும், நாட்டில் உள்ள வயது வந்தோரில் 90 விழுக்காட்டினருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு, அக்டோபரில்தான் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்கள் அனுமதிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், பகாங்கில் வசிப்பவர்கள் மட்டுமே இம்மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதேசமயம் அனைத்து எஸ்ஓபி க்களும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே பகாங் வருவதற்கான முன்பதிவுகளைச் செய்துள்ள பிற மாநிலத்தவர்கள், தங்கள் பயண முகவர்களைத் தொடர்பு கொண்டு பயணத்தை தள்ளிப்போடவோ அல்லது ரத்து செய்யவோ அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments

leave a reply

Recent News