loader
விரைவில் 'பரமபதம்'!

விரைவில் 'பரமபதம்'!

கோலாலம்பூர் ஜூலை 2-

'பரமபதம்' ஒரு கலைஞனின் மாறுபட்ட படைப்பு.

விக்னேஷ் பிரபு இயக்கத்தில், முனைவர் லட்ச பிரபு, முனைவர் சக்கரவர்த்தி இணைந்து, சாய் நந்தினி  நிறுவனத்தின்  தயாரிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் 'பரமபதம்'.

சரித்திரப் புகழ் மிக்க கெடா மாநில மண்ணின் மைந்தன் எடுக்கும் இத்திரைப்படத்தில், சரித்திர விளையாட்டுதான் படத்தின் உயிரோட்டம்.

‘பரமபத’த்தின் 2-வது டீசர் அண்மையில் தலைநகரில்  வெளியிடு கண்டது. படத்தின் இயக்குனர் விக்னேஷ் பிரபு சொன்னது போல், சில காட்சிகள்  ஒரு வித்தியாசமான தளத்தில், சரிதிரப்பூர்வமான இடங்களில் காட்சியமைக்கப் பட்டுள்ளன.

4 இளைஞர்கள் காட்சியில் வருகிறார்கள்

இவர்கள் யார்? கேமராவை வைத்துக்கொண்டு காட்டுக்கு நடுவே,  ஆர்.எஸ்.சி  என்று  பெயர் பதித்த பழமை வாய்ந்த கட்டடதிற்கு எதற்கு நுழைகிறார்கள்? அவர் கையில் எப்படி பழைமைவாய்ந்த 'பரமபதம்' கிடைத்தது? இது எந்தக் காலத்தில் யாரால் உபயோகிக்கப்பட்டது?  இது ஏன் இவர்களுக்குக் கிடைத்தது? இதை  விளையாடினால் இவர்கள் வாழ்க்கையில் என்னென்ன திருப்புமுனை பிறக்கும்? உண்மையில் இந்தப் 'பரமபத'த்தின் ரகசியம் யாருக்கு தெரியும்?  இதை யார்- யார் தேடுகிறார்கள்? ஏன் தேடுகிறார்கள்? இதனால் அவர்களுக்கு என்ன லாபம்? வஜ்ரா என்பவர் யார்? அவருக்கும் 'பரமபத'த்திற்கும் என்ன சம்பந்தம்? இப்படிப் பல கேள்விகளை இந்த இரண்டாவது டீசரில் நம் மனதில் பதியவைத்துள்ளார் இயக்குனர்.

திடீர் என்று பென் ஜி ஒரு நூலகத்தில் இருப்பதுபோல் அல்லது அறிவியல் கூடத்தில் இருப்பதுபோல் ஒரு காட்சி வருகிறது. அவரது உடையை வைத்துப் பார்க்கும்போது, ஒரு படித்த முனைவர் போல் காட்சியளிக்கிறார். இவருக்கும் 'பரமபத'த்திற்கும் என்ன சம்பந்தம்? ஆர். எஸ் .சி (என்ற) எழுத்து நமக்கு என்ன சொல்ல வருகிறது?

சோழ  சாம்ராஜ்யமா? இல்லை வேறு ஒரு குறியீடா?

இவை அனைத்திற்கும் இவ்வாண்டு வெளியாகவிருக்கும்

'பரமபதம்' விடைகொடுக்கும் காத்திருங்கள்!

 

1 Comments

  • Dr Latcha Perrabu PhD
    2019-07-02 00:32:43

    A great write up bro. Tqvm.

leave a reply

Recent News