loader
14 மணி நேரம் இடைவிடாது சிலம்பம்!  மலேசிய சாதனைப் புத்தகத்தில் கவியரசி!

14 மணி நேரம் இடைவிடாது சிலம்பம்! மலேசிய சாதனைப் புத்தகத்தில் கவியரசி!

கோலாலம்பூர், ஆகஸ் 31: மலேசியாவில் சிலம்பக்கலையில் சாதனை நிகழ்த்தி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் கெடாவைச் சேர்ந்த 27 வயது கவியரசி சங்கர்.

14 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பக் கலையை நிகழ்த்தி இச்சாதனையைப் படைத்துள்ளார்,  சிலம்ப பயிற்சியாளரான கவியரசி சங்கர்.

தமது அடுத்த இலக்கு கின்னஸ் உலக சாதனை நிகழ்த்துவதுதான் என்று கூறும் இவர், சிலம்பக் கலையை ஆர்வத்தோடு பலரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தமது வாழ்நாள் கனவு என்கிறார். 

நூறு ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் இக்கலை இருக்கிறது என்றாலும், சீலாட் மற்றும் தெக்குவான்டோ போல் சிலம்பக் கலையைப் பற்றி பலருக்கும் தெரியவில்லை என்கிறார்.

8 வயதிலிருந்தே சிலம்பக்கலையில் ஆர்வம் இருந்ததாகக் கூறும் இவர், பள்ளியில் புறப்பாட நடவடிக்கையின் வழி இக்கலையைக் கற்றதாகக் கூறுகிறார்.

மாஸ்டர் அன்பரசன் - மாஸ்டர் அன்பழகன் இருவரின் தலைமையில், மலேசியக் கோர்வை சிலம்ப சங்கத்தின் கீழ், சிலம்பப் பயிற்சியைத் தற்போது கற்றுக் கொடுத்து வருகிறார் கவியரசி. தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News