loader
இன்று வெளியாகவிருந்த விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்' ... மலேசியாவில் வெளியிடுவதில் சிக்கல்!

இன்று வெளியாகவிருந்த விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்' ... மலேசியாவில் வெளியிடுவதில் சிக்கல்!

கோலாலம்பூர் ஜூன் 21-

'மாலீக் ஸ்ட்ரீம்' வெளியீடான 'சிந்துபாத் திரைப்படம், இன்று (ஜூன் 21) மலேசியா முழுவதும் திரையிடப்படும் என அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வந்த நிலையில், தற்போது  இப்படம் வெளியீடு காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சற்றுத் தாமதம் ஏற்படும் என, மாலீக் ஸ்ட்ரீம் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில்  அறிவித்துள்ளது.

தாமதத்திற்கான காரணம் எதுவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தாமதத்திற்கு மன்னிப்புக் கோரி,  தவிர்க்க முடியாத சில காரணங்களால், படம் வெளியிடுவது தாமதமாகி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இப்பிரச்னையை விரைந்து சரி செய்து, அடுத்த அறிவிப்பை வழங்குவோம் என, மாலீக் ஸ்ட்ரீம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News