loader
டத்தோ எம்.ராமச்சந்திரன் தாக்கப்பட்ட விவகாரம்... கோழைகளுக்குப் பயப்படப்போவதில்லை! - பினாங்கு துணை முதல்வர் காட்டம்

டத்தோ எம்.ராமச்சந்திரன் தாக்கப்பட்ட விவகாரம்... கோழைகளுக்குப் பயப்படப்போவதில்லை! - பினாங்கு துணை முதல்வர் காட்டம்

பினாங்கு, ஜூலை 23: பினாங்கு இந்து அறப்பணி வாரிய  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன் தாக்கப்பட்டதை அடுத்து பினாங்கு துணை முதல்வர் இராமசாமி தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

நேற்று இரவு 10 மணியளவில் மருத்துவமனைக்கு ராமச்சந்திரனைப் பார்க்கச் சென்றதாகவும் . அவர் தாக்கப்பட்டாரா இல்லையா என்று தன்னிடம் கேட்கும் அளவுக்கு அவர் சுயநினைவுடன் இருந்தார் என்றும் இராமசாமி தெரிவித்தார்.

நேற்று இரவு அவர் செபராங் ஜெயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்தச் சம்பவத்திற்கு பின்னர் நேற்று அவரது மனைவி மற்றும் மருமகனால் ஒரு போலீஸ் அறிக்கை செய்யப்பட்டது. கோழைத்தனமான தாக்குதலின் பின்னணியில் உள்ள சந்தேக நபர்களை போலீசார் விசாரிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

டத்தோ இராமா சிறந்த மனிதர், தொழிலாளர் விஷயங்களில் மிகவும் அறிவார்ந்தவர், முன்னாள் பிரபல தொழிற்சங்கவாதி மற்றும் மனிதவள மேலாளர். அவர் ஓய்வு பெற்றதும், டிஏபி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இரண்டு முறை எம்.பி.எஸ்.பி நகராண்மைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

நகராண்மைக்கழகப் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டத்தோ இராமா,  இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநராக (ED) நியமிக்கப்பட்டார்.

பினாங்கு மாநிலத்தில் இந்தியர்களுக்கு சேவை செய்வதற்கான முன்னணி அமைப்பாக அறப்பணி வாரியத்தை வலுப்படுத்துவதில் அவர் தனது நிலைப்பாட்டில் சிறந்து விளங்கினார். டத்தோ இராமாவிற்கு எதிரான தாக்குதல் பினாங்கு அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதலாகும். பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில் நானும் அதன் தலைவராக இருக்கிறேன். பினாங்கு அரசாங்கத்தின் பிரதிநிதியாக நான் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டுவேன் என்றும், தாக்குதலுக்குப் பின்னால் கோழைகளுக்கு பயப்படப்போவதில்லை என நான் பினாங்கு இந்தியர்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று இராமசாமி தெரிவித்துள்ளார்.

டத்தோ இராமா விரைவில் குணமடையவும், அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

0 Comments

leave a reply

Recent News