loader
இறப்புச் சடங்கு - கட்டணத்தைக் குறைக்க வேண்டும்! - டத்தோ மோகன் ஷான்

இறப்புச் சடங்கு - கட்டணத்தைக் குறைக்க வேண்டும்! - டத்தோ மோகன் ஷான்

பெட்டாலிங் ஜெயா ஜூலை 23: கோவிட் 19 தொற்றினால் இறந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கோவிட் பெருந்தொற்றால் தற்போதைய சூழலில் மக்கள் பெரும் அவதியில் உள்ளனர். இந்நிலையில் இறப்பு என்பது தாங்க இயலாத சோகம் ஆகும். அந்த நிலையிலும் இறப்புச் சடங்குகளுக்கான கட்டணம் அதிகம் என்பது வேதனையானது என மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினர் இதனால் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.  கோவிட் தொற்றால் மரணமடையும் இந்துக்களின் சடலங்கள் சுற்றப்பட்டு பிணப்பெட்டியில் வைத்து கிருமி நாசினி தெளித்த பிறகே மின் சுடலைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.

இது குறித்து சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவிற்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் இறுதிச் சடங்கு காரியம் செய்பவர்கள் 5000 வெள்ளி வரை கட்டணமாக வசூலிப்பதாகவும், இது வசதி குறைந்த குடும்பத்தினருக்குப் பெரும் சிரமமாக இருப்பதாக அவர்கல் முறையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வழக்கமாக 2,500 முதல்  2,800 வசூலிப்பதே நடைமுறை.

பிணப்பெட்டிக்கு RM 500, போக்குவரத்துச் செலவுக்கு RM 500 மற்றும் அரசாங்கப் பராமரிப்பிலான மின் சுடலைக்கு RM 100 முதல் RM 200 வரைதான் செலவாகும்.

எனவே, கோவிட் தொற்றினால் மரணமடைகின்றவர்களுக்கான பிணப்பெட்டிகள் வாங்கவும் பிரேதங்களை மின் சுடலைக்குக் கொண்டு செல்லவும், இந்து சங்கத்தையும் சேர்த்துக் கொள்ளும்படி சுகாதார அமைச்சிடம் டத்தோ மோகன் ஷான் வலியுறுத்தினார்!

0 Comments

leave a reply

Recent News