loader
ஹரிராயா - மக்கள் வீட்டிலேயே இருப்பார்கள் என நம்புகிறொம்!

ஹரிராயா - மக்கள் வீட்டிலேயே இருப்பார்கள் என நம்புகிறொம்!

கோலாலம்பூர், ஜூலை 19: ஹரி ராயா  கொண்டாட்டத்திற்கு முன்னதாக இன்று திங்கள்கிழமை (ஜூலை 19) மதியம் அசாதாரண போக்குவரத்து வெளிப்பாடு எதுவும் கண்டறியப்படவில்லை.

புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குனர் டத்தோ அஜிஸ்மான் அலியாஸ் இது குறித்துக் கூறுகையில்,  தற்போது நடைமுறையில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணத் தடையை பொதுமக்கள் பின்பற்றுவார்கள் என்று தனது துறை நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் வீட்டிலேயே இருப்பார்கள், அவசர விஷயங்கள் இல்லாவிட்டால் வெளியே செல்லமாட்டார்கள் என்று நாங்கள் நம்புவதாக பெர்னாமாவிடம்  அவர் கூறினார்.

இதற்கிடையில், மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், காவல்துறையினரால் அமைக்கப்பட்ட சாலைத் தடைகள் இருந்த சில இடங்களில் மட்டுமே நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் சிரம்பன்-நெடுஞ்சாலையில், சுங்கை பெசி டோல் பிளாசாவில் தெற்கே செல்லும் 400 மீட்டர் தொலைவில் சாதாரண நெரிசல் ஏற்பட்டது.

கிழக்குக் கடற்கரையை நோக்கிய போக்குவரத்து நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு சாலை தடை உள்ள இடங்களில் மட்டுமே நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை நோக்கி பெந்தோங் டோல் பிளாசா மற்றும் தலைநகர் நோக்கி கோம்பக் டோல் பிளாசா செல்லும் பாதைகளில் நெரிசல் சுமார் 200 மீ  நெதிசல் ஏற்பட்டது.

0 Comments

leave a reply

Recent News