loader
மலேசிய சிவாஜி கணேசன் கலை மன்றத்தின் ஏற்பாட்டில், சிவாஜி நினைவு நாள் திரைப்படம் தேர்வு செய்யும் போட்டி!

மலேசிய சிவாஜி கணேசன் கலை மன்றத்தின் ஏற்பாட்டில், சிவாஜி நினைவு நாள் திரைப்படம் தேர்வு செய்யும் போட்டி!


கோலாலம்பூர், ஜூலை 13: மலேசிய சிவாஜி கணேசன் கலை மன்றத்தின் ஏற்பாட்டில்  எதிர்வரும் 25.07.2021 ஞாயிற்றுக்ககிழமை இரவு 8.00 மணிக்கு  மன்றத்தின் தலைவர் இயக்குனர் விஜயசிங்கம் கந்தசாமி தலைமையில், நடிகர் திலகம்  சிவாஜி கணேசனின் 20 -ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி இயங்கலை வழி மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் சங்கத்தின் தலைவர் ராம்குமார் ஆய்வாளர் முனைவர் மருது மோகன், திரைப்பட நாடக நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், இயல் இசை நாடக இலக்கியப் பேச்சாளர் பாண்டிதுரை  ஆகிய நால்வரும் உரை நிகழ்த்துகிறார்கள்.

இனிமையான சிவாஜி படப் பாடல்களும் நிகழ்வில் இடம்பெறும். நடிகர் திலகம் நடித்து உங்களுக்குப் பிடித்த 10 சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செயும் போட்டியும் நடைபெறும்.

திரைப்படங்களைத் தேர்வு செய்து  1 முதல் 10 வரை வரிசைப்படுத்தி அதற்கான காரணங்களை ஒரு பக்கத்திற்கு மேல் போகாமல் கட்டுரையாக டைப் செய்து எதிர்வரும் 19.7.21 ஆம் தேதிக்குள் பின் வரும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும்.

மின் அஞ்சல் முகவரி:
sivajimandrammalaysia@gmail.com

எதிர்வரும் 25.7.21 ஞாய்றுகிழமை  இரவு 8.00 மணிக்கு நடிகர் திலகம் சிவாஜியின் நினைவு நாள் இயங்கலையில் நடைபெறும். தேர்வு பெரும் உங்கள் கட்டுரைகளை நீங்கள் கலந்து கொண்டு  வாசிக்கலாம். வெற்றி பெறும் கட்டுரையாளருக்கு அக்டோபர் மாதம் நடைபெறும் சிவாஜி கணேசன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கேடயம், வழங்கி சிறப்பு செய்யப்படும். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அடையாள எண் பின்னர் அறிவிக்கப்படும். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதுடன், இயங்கலை நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும்படியும் மலேசிய சிவாஜி கணேசன் கலை மன்றம்  கேட்டுக் கொள்கிறது.
மேல் விவரங்களுக்கு இயக்குனர் விஜயசிங்கத்தை 012-3728081 என்ற எண்களில் அழைக்கலாம்.

0 Comments

leave a reply

Recent News