loader
அம்னோ சொல்லிவிட்டது...   ம.இ.கா - மசீச என்ன சொல்லப் போகிறது?

அம்னோ சொல்லிவிட்டது... ம.இ.கா - மசீச என்ன சொல்லப் போகிறது?

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் ஜூன் -8

நாட்டின் பிரதமர்  டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு அம்னோ வழங்கிய ஆதரவை உடனடியாக மீட்டுக்கொள்வதாக, அம்னோ கட்சியின் தேசியத் தலைவர்  டத்தோ ஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி  தெரிவித்தார். 

நேற்று, புதன்கிழமை சுமார் 4 மணிநேரத்திற்கு  மேல் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு, இரவு 1 மணிக்கு டத்தோஸ்ரீ  அகமட் ஸாஹிட் ஹமிடி இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான ம.இ.கா, ம.சீ.ச தலைமையின் நிலைப்பாடு என்ன? அவர்கள் யாரை ஆதரிக்கப் போகிறார்கள்?  என்பது அந்தக் கட்சிகளின் தலைவர்கள்தான் சொல்லவேண்டும்.

நடந்து முடிந்த ம.இ.கா ஆண்டுக்கூட்டத்தில், பிரதமர் முகைதீன் மற்றும்  டத்தோ ஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி  இருவரும் கலந்துக்கொண்டு இயங்கலை வாயிலாக உரையாற்றினர்.

அந்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,  'தமிழ் லென்ஸ்' ஆசிரியர் வெற்றி விக்டர் ஆகிய நான்,  ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரனிடம் ஒரு கேள்வியை முன் வைத்தேன்.  

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை அம்னோ மீட்டுக்கொண்டால் ...  ம.இ.கா பல ஆண்டு கூட்டணி அமைப்பான அம்னோவுக்கு ஆதரவு வழங்குமா? இல்லை டான் ஸ்ரீ முகைதீனுக்கு ஆதரவுகொடுக்குமா? எனக் கேள்வி எழுப்பினேன்.

அதற்கு அவர், "முதலில் அம்னோ அப்படி சொல்லட்டும்,  பிறகு நாங்கள் ம.இ.கா நிலைப்பாட்டைச் சொல்கிறோம்" என்று பதிலளித்தார்.

இப்போது தனது ஆதரவை மீட்டுக்கொள்வதாக அம்னோ சொல்லிவிட்டது. ம.இ.கா தலைவர் என்ன சொல்லப் போகிறார்?

அன்றைய கேள்விக்கு இப்போது ம.இ.கா தலைவரிடம் இருந்து ஒரு திடமான பதில் வருமா? எதிர்பார்ப்போம்!

 

0 Comments

leave a reply

Recent News