loader
கூட்டணியில் இருந்து உறவைத் துண்டித்தது அம்னோ! முகைதீன் உடனே பதவி விலக வேண்டும்! - அம்னோ அதிரடி

கூட்டணியில் இருந்து உறவைத் துண்டித்தது அம்னோ! முகைதீன் உடனே பதவி விலக வேண்டும்! - அம்னோ அதிரடி

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர், ஜூன் 8: பரபரப்பான சூழலில் அம்னோ  உச்சமன்ற செயலவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அம்னோ  தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் அரசாங்கத்திற்கு  அம்னோ வழங்கிய ஆதரவை, அம்னோ உச்சமன்றம் உடனடியாக மீட்டுக்கொள்வதாகவும், டான் ஸ்ரீ முகைதீன் யாசின் பதவி விலகி, புதிய பிரதமர் நியமிக்கப்படவேண்டும் என்று அம்னோ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் டான் ஸ்ரீ முகைதீனின் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கவிழும் நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.

கடந்த 2020 மார்ச் மாதம் அம்னோ உச்சமன்ற செயலவை  டான் ஸ்ரீ முகைதீ  தலைமையிலான அரசாங்கத்திற்கு  ஆதரவு கொடுத்ததற்குக் காரணம், நாட்டின்  பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன் காக்கப்படவேண்டும் என்பதன் அடிப்படையில்தான்.  அதோடு கோவிட்-19 தொற்றைக் கையாள வேண்டும் என்பது முதன்மை நோக்கமாக இருந்தது.

ஆனால், டான் ஸ்ரீ முகைதீன் தலைமையிலான அரசு நல்லாட்சியைக் கொடுக்கத் தவறிவிட்டது. முகைதீன் ஆட்சி தோல்வியடைந்துவிட்டது. இதனால், மக்கள் அவதிப்படுகிறார்கள் என ஸாஹிட் தெரிவித்தார்.

அதோடு, நிலையில்லாத முடிவுகள் மக்களை வாட்டி எடுத்ததே தவிர, கோவிட்-19 குறைந்த பாடில்லை. பொருளாதர மந்த நிலை ஏற்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த ஆண்டு மே வரை சுமார் 1099 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இனியும் இந்த அரசை நம்பினால்  இன்னும் மோசமான நிலைக்கு நாடும் மக்களும் சென்று விடுவார்கள். ஆகையால், மாமன்னரின் ஆலோசனைப் படி, ஜூலை 26 -ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். புதிய தலைமை வரவேண்டும்...  முகைதீன் பதவி விலகி, ஆடுத்த பிரதமர் வரவேண்டும் என  டத்தோ ஸ்ரீ  அஹமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News