loader
ஆஸ்ட்ரோவின் KAMI CARE HELPLINE

ஆஸ்ட்ரோவின் KAMI CARE HELPLINE

மலேசியர்களை ஆதரிப்பதர்க்காக ஆஸ்ட்ரோ வானொலி

 ‘KAMI CARE HELPLINE’-ஐ தொடங்குகிறது

 

கோலாலம்பூர், 2021 ஜூலை 2 – இக்கட்டானக் காலக்கட்டத்தில், உதவிக்கோரும் மலேசியர்களுக்கு உதவும் வண்ணம் ஆஸ்ட்ரோ வானொலி Kami Care Helpline-ஐ தொடங்குகிறது. உதவிக்கோரும் மலேசியர்கள், அனைத்து ஆஸ்ட்ரோ வானொலித் தரங்களிடமும் புலனம் (WhatsApp) வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். அரிசி, சர்க்கரை, உப்பு, மாவு, பிஸ்கட், தேநீர், டின்களில் கிடைக்கப்பெறும் உணவு வகைகள் மற்றும் உடனடி மீ வகைகள் (instant noodles) போன்ற தினசரி தேவைப் பொருட்களை உதவிக்கோரும் மலேசியர்கள் பெறுவர். 

 

ஆஸ்ட்ரோ வானொலியின் தலைமை நிர்வாக அதிகாரி, கென்னி ஓங் கூறுகையில், “இந்த இக்கட்டானக் காலக்கட்டத்தில் அதிகமான மலேசியர்கள் தங்களின் அன்றாட தேவைகளைப் பெற Kami Care Helpline உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். Kami Care பிரச்சாரத்தின் வழி எங்களின் உதவிகளை அதிகரிப்பதோடு உதவிக்கோருபவர்களை அடையாளம் காணவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். மேலும் பல புதியத் தகவல்களை விரைவில் பகிர்ந்துக் கொள்வோம். ”

உதவிக்கோரும் அனைத்து மலேசியர்களும் தங்களின் விண்ணப்பங்களைப் புலனம் (WhatsApp) வாயிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ள Kami Care Helpline எண்களின் வழியாக தினமும் சமர்ப்பிக்கலாம். உதவிக்கோருபவர்களைப் பிரதிநிதித்து நேயர்களும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். பெறுநர்களின் பெயர், தொலைப்பேசி எண், வீட்டு முகவரி மற்றும் ஏன் இந்த உதவிப் பெறுநருக்குத் தேவை என்பதற்கானக் குறுகிய விளக்கம் ஆகியவற்றை Kami Care Helpline-க்கான விண்ணப்பங்கள் கொண்டிருத்தல் அவசியம். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேரடியாகத் தொடர்புக் கொள்ளப்படுவர். இந்த அத்தியாவசியப் பொருட்களின் இலவச விநியோகம் தினசரி மேற்கொள்ளப்படும்.

புலனத்தில் Kami Care Helplines:

 

ஆங்கில வானொலித் தரங்கள்

  • 016 6249999 – HITZ

  • 016 4985555 - HITZ Sabah

  • 016 532 7777 - HITZ Sarawak

  • 016 4935555 - MIX

  • 016 5108888 - LITE



 

மலாய் வானொலித் தரங்கள்

  • 016 5127777 - ERA

  • 016 2570000 - ERA Sabah

  • 016 3150000 - ERA Sarawak

  • 016 3260000 - SINAR

  • 016 7369999 - GEGAR

  • 016 9175555 - ZAYAN

 

சீனம் & தமிழ் வானொலித் தரங்கள்

  • 016 5073333 – MY

  • 016 8718888 - MY Sabah

  • 016 5413333 - MY Sarawak

  • 016 7459999 - MELODY

  • 016 9988889 - GOXUAN

  • 016 4913333 - ராகா

 

மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோ வானொலித் தரங்களின் அகப்பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை வலம் வாருங்கள்: HITZ, MIX, LITE, ERA, SINAR, GEGAR, ZAYAN, MY, MELODY, GOXUAN, மற்றும் ராகா

0 Comments

leave a reply

Recent News