loader
காலாவதியான MITI கடிதம் காட்டியவருக்கு  5000 வெள்ளி அபராதம்!

காலாவதியான MITI கடிதம் காட்டியவருக்கு 5000 வெள்ளி அபராதம்!

பட்டர்வொர்த், ஜூன் 29:  போலீஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

தாசேக் குளுகோர் ஜலான் கம்போங் செலாமாட்டில் போடப்பட்ட சாலைத் தடுப்பில், 41 வயது மிக்க ஆடவர் காலாவதியான MITI கடிதத்தைக் காட்டியதோடு, போலீஸுக்கு லஞ்சம் கொடுத்தக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்.

நள்ளிரவு 3.30 மணியளவில்  இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக வடக்கு செபராங் பிறை  உதவி கமிஷன் நூர்ஸைனி மொஹமட் நூர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அந்நபர் காலாவதியான MITI கடிதத்துடன் கடக்க முயன்றதால், சாலைத் தடுப்பை மேற்பார்வையிடும் காவல்துறை அதிகாரியிடம் அனுப்பப்பட்டதாகவும், ​​ஆனால் அந்த நபர் மேற்பார்வையாளருக்கு 50 வெள்ளி  லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார் என்றும் ஏசிபி நூர்ஸைனி கூறினார்.

பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம்  ஒப்படைக்கப்பட்டதாக  நூர்ஸைனி தெரிவித்தார்.

இந்நிலையில், காலாவதியான MITI கடிதம் மற்றும் அவரது மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டதோடு அனுமதியின்றி மாநிலங்களுக்கு இடையே பயணிக்க முயன்றதற்காக அவருக்கு  5,000 வெள்ளிக்கான் காம்பவுண்ட் அறிக்கை வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News