loader
சீட்டுக்கட்டைப் போல் சரிந்த அடுக்குமாடிக் கட்டிடம்! 100-க்கும் மேற்பட்டோர் பலி! அமெரிக்காவின் கோர விபத்து!

சீட்டுக்கட்டைப் போல் சரிந்த அடுக்குமாடிக் கட்டிடம்! 100-க்கும் மேற்பட்டோர் பலி! அமெரிக்காவின் கோர விபத்து!

வாஷிங்டன், ஜூன் 25: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகம்  உள்ளது. லத்தீன் அமெரிக்காவின் பராகுவே, கொலம்பியா, வெனிசுலா, அர்ஜெண்டினா, உருகுவே   நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் அதிகம் தங்கி இருந்தனர்.1981-களில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தின் பராமரிப்புப்  பணி நடைபெற்று வந்த வேளையில், இந்தக் கட்டிடம் இன்று அதிகாலை 1 மணி அள்வில் சீட்டுக்கட்டு  போல் சரிந்துவிழுந்தது.

கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் சரிந்தது. குடியிருப்பின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுமார் 55 குடியிருப்புகள் இடிந்து சரிந்துள்ளது. இந்தக் கோர விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுவன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் , 100க்கும் மேற்பட்டோர்  இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. பலர் காயமடைந்துள்ளனர் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவம் நடந்தபோது கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. காணாமல் போனவர்களை தங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழுவதற்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை, மியாமி-டேட் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பராகுவே அதிபரின் உறவினர்கள் உள்பட பராகுவேவைச் சேர்ந்த 51 பேரைக் காணவில்லை.

அர்ஜென்டினாவின் பிரபல  பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஆண்ட்ரஸ் கால்ப்ராஸ்கோனி, அவரது மனைவி மற்றும் புதிதாக தத்தெடுக்கப்பட்ட ஆறு வயது மகள் ஆகியோரையும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News