loader
கொரோனா தோற்றம் குறித்து அமெரிக்காவையும் ஆய்வு செய்யுங்கள்! - சீனா கோபம்

கொரோனா தோற்றம் குறித்து அமெரிக்காவையும் ஆய்வு செய்யுங்கள்! - சீனா கோபம்

சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

கொரோனா வைரஸ் உகான் நகரில்தான் தோன்றியது என்பதை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகளையெல்லாம் உலுக்கி விட்டது. இன்றளவும் அதற்கு எதிராக உலகமே ஒன்றிணைந்து யுத்தம் நடத்தி வருகிறது.

கொரோனா  அறிகுறிகளைக் கொண்ட முதல் நோயாளி உகானில் 2019 டிசம்பர் 8 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக சீனா, உலக சுகாதார நிறுவனத்திற்குத் தெரிவித்தது.

சர்வதேச ஊடகங்கள் பல உகான் நகருக்குச் சென்று செய்தி சேகரித்து விஞ்ஞானிகளைப் பேட்டிகண்டு ஆவணப் படங்களையும் வெளியிட்டு உள்ளனர்.

கொரோனா தொற்று குறித்து சீனா அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே, அதன் உகான் நகர வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் மருத்துவ உதவியை நாடியதாக, அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி, வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில்  கொரோனா  தொற்றுநோயின் மூலத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் 90 நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஜோ பைடன் தேவைப்பட்டால்,  மேலதிக விசாரணையில்,  சீனாவிடம் சில கேள்விகளை முன் வைப்பது குறித்தும், விசாரணை குழுவிடம் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்  எங்கிருந்து பரவியது என்பதை ஆராயும் முயற்சியில் எங்கள் தேசிய ஆய்வகங்கள் மற்றும் எங்கள் அரசாங்கத்தின் பிற ஏஜென்சிகள், உளவுத்துறையினர், இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளேன். இது தொடர்பான பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முழுமையாக தெரிவிக்கும்படி நான் புலனாய்வு பிரிவிடம் கூறியுள்ளேன்.

முழுமையான, வெளிப்படையான, சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச விசாரணையில் பங்கேற்கவும், கொரோனா தொடர்புடைய அனைத்து புள்ளிவிவரங்கள்  மற்றும் ஆதாரங்களை வழங்கவும் சீனாவிற்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா, ஒத்த எண்ணம் கொண்ட  உலகின் நட்பு நாடுகளுடன் தொடர்ந்து செயல்படும்  என அறிக்கையில் ஜோ பைடன் கூறி உள்ளார்.

இது தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை உடனுக்குடன் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்மென்றும், இதன் தரவுகள் அனைத்தும் எந்தவொரு ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக கையாளப்படும் என்றும் அதில் குறிப்பிடுள்ளார்.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு சீனாவை விசாரிப்பது போல் அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும் என சீனா கூறி உள்ளது.

ஜோ பைடனின் திடீர் உத்தரவைக் கடுமையாக எதிர்த்துள்ள சீனா, அமெரிக்கா மீது கடுமையான குற்றம்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள சீனா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான ஜாவோ லிஜியன், "அமெரிக்கா அரசு உள்நோக்கத்துடனேயே இந்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஈராக்குக்கு கோடிக்கணக்கில் ஆயுதங்கள் விற்கப்பட்டது குறித்து விமர்சனம் எழுந்துள்ள சூழலில், அதை திசைமாற்றுவதற்காகவே சீனா மீது அவதூறு கருத்துக்களை திட்டமிட்டு தெரிவித்து இதைச் செயல்படுத்தியுளார் ஜோ பைடன். உலகமே இந்தப் பெருந்தொற்றை எதிர்த்து போராடி வரும் சூழலில் உலக சுகாதார அமைப்பை அவமதித்தது மட்டுமில்லாமல், நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையைட் சீர்குலைக்கிறார் பைடன்.

கொரோனா தொற்றின் தொடக்கம் குறித்து எங்களுக்கு அமெரிக்காவின் மீது சந்தேகம் உள்ளதால் உலக சுகாதார அமைப்பு சீனாவை விசாரிப்பது போல் அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும். உலகமெங்குமுள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான ஆய்வகங்களில் நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுவே வெளிப்படையான விசாரணையாக இருக்கும் என கூறி உள்ளார்.

0 Comments

leave a reply

Recent News