loader
அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை!

அமெரிக்காவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரே வழியாக உள்ள தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அமெரிக்காவிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் குறைந்துள்ளது.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 46 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 15 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை 11 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுபூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டு விட்டது.

இதற்கிடையில், கொரோனா பரவலைத் தடுப்பதில் முக்கியமானதாக கருத்தப்படும் முகக்கவசம் அணிதல் அமெரிக்காவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்வோர்  கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பொது இடங்களில் முக்ககவசம் அணிய கட்டாயத்தேவையில்லை என்று அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது!
    

0 Comments

leave a reply

Recent News