loader
அதிர்ச்சி!  இயக்குநர் தாமிரா கொரோனாவினால் மரணம்!

அதிர்ச்சி! இயக்குநர் தாமிரா கொரோனாவினால் மரணம்!

சென்னை, ஏப்ரல் 27: இயக்குனர் ஷங்கர் தயாரித்த படம் உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர்  தாமிரா கோவிட் தொற்று காரணமாக காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஷங்கரின் தயாரிப்பில் இயக்குனர் தாமிரா இயக்கத்தில் உருவான திரைப்படம் ரெட்டைசுழி’. இந்த திரைப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதி ராஜா மற்றும் இயக்குனர் சிகரம் பாலசந்தர் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமுத்திரக்கனி நடித்த ‘ஆண்தேவதை’ உள்ளிட்ட ஒரு சில படங்களை இயக்கியவர் இயக்குனர் தாமிரா.

இவர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சற்று முன் காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து திரையுலகினர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்!

0 Comments

leave a reply

Recent News