loader
மலாயா வரிப்புலியைப் பாதுகாக்க நடவடிக்கை!

மலாயா வரிப்புலியைப் பாதுகாக்க நடவடிக்கை!


 

 

கோலாலம்பூர், ஏப்ரல் 13: மலாயா வரிப்புலியின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, அந்த இனத்தைப் பாதுகாக்கவும், சட்டவிரோத வேட்டை மூலமாக அவை கொல்லப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேட்டையில் ஈடுபடுபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என்றும், இது தொடர்பான வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும் என்றும் எரிசக்தி, மற்றும் இயற்கைவள அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்  சம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.

மலாயா வரிப்புலியின் இனவிருத்தியை அதிகரிக்கும் பொருட்டு, தோட்டம் மற்றும்  ​மூலத் தொ​ழில் துறை அமைச்சு  உட்பட மேலும் சில ஏஜென்சிகளின் ஒத்துழைப்புடன்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அவர்  குறிப்பிட்டார்.

   

0 Comments

leave a reply

Recent News