loader
இங்கிலாந்து இளவரசர் மரணம்! மாமன்னர் இரங்கல்!

இங்கிலாந்து இளவரசர் மரணம்! மாமன்னர் இரங்கல்!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் காலமானார்.

அவருக்கு வயது 99.  கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்த இளவரசர் பிலிப் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றிருந்தார்.

இந்த நிலையில், தனது வின்ஸ்டர் கேசில் அரச மாளிகையில் இளவரசர் பிலிப் உயிர் பிரிந்ததாக  அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் பிலிப் ஆவார்.

இதனையடுத்து, மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துவாங்கு  ஹஜ்ஜா அஸிஸா அமினா மை​மூனா தம்பதியர், பிரிட்டிஷ் குடும்பத்திற்கு தங்களின் அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்!

0 Comments

leave a reply

Recent News