loader
மாநிலம் விட்டு மாநிலம் செல்ல ரமலான் காலத்தில் அனுமதி உண்டா?

மாநிலம் விட்டு மாநிலம் செல்ல ரமலான் காலத்தில் அனுமதி உண்டா?

 

கோலாலம்பூர், ஏப்ரல் 9: ரமலான் பெருநாளை முன்னிட்டு மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பயணங்களுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என பாதுகாப்புத்துறை இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கோவிட் தொற்று பரவல் அபாயம் தொடந்து இருந்துவருவதே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார். தற்போதைய சூழலில் கோவிட் நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தாலும், இன்னும் அதன் மிரட்டலிருந்து நாம் விடுபடவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.

மேலும், மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தடையை அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது. இருப்பினும், தேவைப்படும் சில வர்த்தகப் பயணங்களை அனுமதிப்பதற்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

தற்போது தளர்வுகளை ஏற்படுத்த முடியாது என்றும், இத்தாலி மற்றும் பிரான்ஸில் தினசரி 20,000 பேர்வரை தொற்றுக்கு உள்ளாகின்றனர், இதனால் அவர்கள் மீண்டும் நடமாட்ட கட்ட்டுப்பாட்டை அமல்படுத்தியிருப்பதையும் அவர்  சுட்டிக்காட்டினார்!

0 Comments

leave a reply

Recent News