loader
"KITA TARAK TAKUT SAMA LU"  ம.இ.காவின் விஸ்வரூபம்!

"KITA TARAK TAKUT SAMA LU" ம.இ.காவின் விஸ்வரூபம்!

(வெற்றி விக்டர் - ஆர் பார்த்திபன்)

கிள்ளான் ஏப்ரல் -2

கடந்த காலங்களைப் போல் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு போகும் மன நிலையில் ம. இ.கா இல்லை என ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்  தெரிவித்தார்.

இன்று ம.இ.கா வின் 74 -வது பொதுப் பேரவை  நடைபெற்ற வேளையில், எதிர்பார்த்தது போல் ம.இ.காவின் பேராளார் மாநாட்டில் பிரதமர் டான் ஸ்ரீ மூகைதீன் யாசின் இணையம் வழி நேரலையில் கலந்துகொண்டு உரையாற்றினார். தேசிய முன்னணி தலைவர்  டத்தோ ஸ்ரீ ஷாஹிட் ஹமிடியின் உரையும் காணொளி  வாயிலாக ஒளிபரப்பப்பட்டது.

கடந்த காலங்களைப் போல் அம்னோ சொல்வதைச் சகித்துக்கொண்டு இருக்க முடியாது. தவறு என்றால் சுட்டிக்காட்டுவோம். அம்னோவால் பாஸ் கட்சியுடன் இணைந்து வேலை செய்ய முடிகிறது. ஆனால், பெர்சாத்துவோடு வேலை  செய்ய முடியவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. அது அவர்கள் முடிவு.

எங்களைப் பொருத்தவரை டத்தோ முகைதீன் யாசின் தற்போது நாட்டின் பிரதமர்.  அம்னோ தலைவர்கள் அமைச்சரவையில் உள்ளனர். ம.இ.கா, ம.சீ.ச தலைவர்கள் அமைச்சரவையில் உள்ளனர்.  அதுவும் அவர் தலைமையில் ம.இ.காவின் துணைத் தலைவர்  டத்தோ ஸ்ரீ சரவணன்   அமைச்சரைவையில் இடம்பெற்றுள்ளார். ஆகையால், அவரை மரியாதை நிமித்தமாக எங்கள் மாநாட்டில் அழைப்பதில் தவறு இல்லை.  நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை என  டான் ஸ்ரீ  விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எங்கள் மூத்த தலைவர் துன் சாமிவேலு சொல்வதுபோல் "KITA TARAK TAKUT SAMA LU "  என்பது போல், ம.இ.கா யாருக்கும் பயப்படத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

நாங்கள் முதிர்ச்சி அடைந்த அரசியலைப் பின்பற்றுகின்றோம். பல நாள்  கருத்து வேறுபாட்டில் இருந்த அம்னோ -  பாஸ் எப்படி  இணைந்தார்களோ அப்படி நாளை அம்னோ - பெர்சாத்து இணையலாம்.  அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. ஆகையால்  இப்போதைய காலச் சூழலில்  பிரதமர் டான் ஸ்ரீ மூகைதீன் யாசினின் தலைமைதுவத்தை ம.இ.கா ஆதரிப்பதாக டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்  திட்டவட்டமாகத் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News