loader
நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கலாம்!  பேங் நெகாரா ஆளுநர்

நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கலாம்! பேங் நெகாரா ஆளுநர்

 

கோலாலம்பூர்  மார்ச் 30 : நாட்டின் மொத்த பணவீக்கம் 5.0 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 2020 காலாண்டில் எரிபொருள் விலை குறைந்ததன் அடிப்படையில் பணவீக்கம் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக பேங்க் நெகாரா ஆளுநர் டத்தோ நோர் சம்சியா முஹமட் யுனூஸ் தெரிவித்திருக்கிறார்

2021-ஆம் ஆண்டில் சராசரியாக இந்த விகிதம்  2.5 முதல் 4.0 விழுக்காடு வரையில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ நோர் சம்சியா குறிப்பிட்டார்.

கொரோனாவினால் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்ட போது, 2020-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த பணவீக்கம் 1.2 விழுக்காடாகப் பதிவாகி இருந்தது.

கடந்த ஆண்டில் ஒரு வெள்ளி 37  காசாக இருந்த எரிபொருள் விலை இவ்வாண்டில் ஒரு வெள்ளி 95 காசாகப் பதிவாகியிருந்தது. இந்த அதிகரிப்பு தற்காலிகமானது என்றும் டத்தோ நோர் சம்சியா தெரிவித்தார்!

 

0 Comments

leave a reply

Recent News