loader
உலகில் மகிழ்ச்சியான நாடுகள்! ஐநா பட்டியலில் மலேசியாவின் இடம்?!

உலகில் மகிழ்ச்சியான நாடுகள்! ஐநா பட்டியலில் மலேசியாவின் இடம்?!

உலகில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது.

சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் 149 நாடுகள் இதில் மதிப்பிடப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், லக்ஸம்பர்க், நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் முறையே இடம்பெற்றுள்ளன. 

இந்தப் பட்டியலில் மலேசியா 81-வது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் 32-வது இடத்திலும், அமெரிக்கா 19-வது இடத்திலும் உள்ளது. இப்பட்டியலில் இறுதி இடத்தில் ஆப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளது!

0 Comments

leave a reply

Recent News