loader
தமிழகத்தில் மட்டும் தாமரை மலரவில்லை! பிஜேபி படு தோல்வி!

தமிழகத்தில் மட்டும் தாமரை மலரவில்லை! பிஜேபி படு தோல்வி!

இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் மீண்டும் மோடியையே பிரதமாரக ஆக்கியிருக்கிறது.

இந்தியா முழுக்க அதிகப் பெரும்பான்மையில் பிஜேபி தனித்தே வெற்றி பெற்றிருப்பதால், பிஜேபி தொண்டர்கள் நாடு முழுக்க தங்கள் உற்சாகத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

மோடி அலை இந்தியாவையே சுருட்டிப் போட்டுவிட்டது என்றாலும், ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழகத்தை உற்று நோக்கும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
காரணம், இந்தியாவையே வளைத்துப் போட்ட பிஜேபியால் தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற இயலவில்லை என்பதுதான்.

பிஜேபியின் தமிழகத் தலைவர்கள் அத்தனை பேரும் தோல்வியைத் தழுவி இருப்பது பெரும் தலைவலியாகியிருக்கிறது, தமிழக பிஜேபிக்கு.
'தாமரை மலர்ந்தே தீரும்' என்று அடிக்கடி சொல்லி வந்த தமிழிசை சௌந்தரராஜன், கனிமொழியிடம் வெற்றியைப் பறிகொடுத்துள்ளார். அதேபோல் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோரும் படு தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
இன்னும் முற்றிலுமாக முடிவு அறிவிக்கப்படாத நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை 38 இடங்களில் திமுகவும், ஒரே ஒரு இடத்தில் மட்டும் (ஓபிஎஸ் மகன்  ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேனி தொகுதி) அதிமுக கூட்டணியும் வெற்றிபெறும் நிலையில் உள்ளன.

ஒட்டு மொத்த இந்தியா முழுக்க வீசிய மோடி அலை தமிழகத்தில் மட்டும் நுழைய முடியாமல் போனது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பிஜேபி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
தமிழகம் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் தாமரை மலர்ந்துவிட்டது, ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏனோ இன்னும் தாமரை மலரவில்லை!

0 Comments

leave a reply

Recent News