loader
இந்திய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு!

இந்திய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு!

இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்திய எதிர்க்கட்சிகள் நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும், வேளாண் சட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ஹேலி ஸ்டீவன்ஸ், இந்திய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்தியச் சந்தைகளின் செயல்திறனை அதிகரிக்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்கிறது எனக் கூறியுள்ளார்.

அமைதியான போராட்டங்கள் எந்தவொரு வளர்ந்து வரும் ஜனநாயகத்திற்கும் அடையாளமாக இருப்பதை அங்கீகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் எந்தவொரு பிரச்சனையும் பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஹேலி ஸ்டீவன்ஸ் வலியுறுத்தியுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News