loader
பெங்களூரு சிறையில் ஆடம்பர வசதிகள்! கைதிகள் சொகுசு வாழ்க்கை! வீடியோ வெளியாகி பரபரப்பு!!

பெங்களூரு சிறையில் ஆடம்பர வசதிகள்! கைதிகள் சொகுசு வாழ்க்கை! வீடியோ வெளியாகி பரபரப்பு!!

 

பெங்களூரில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

மேலும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயணா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது சாதாரண கைதிகள் கூட சிறையில் தனி அறையில் டி.வி, மெத்தை, மின்விசிறி, தாங்களாகவே சமைத்து சாப்பிடுவதற்கு கியாஸ் அடுப்புகளை பயன்படுத்தும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர கைதிகள் சர்வ சாதாரணமாக செல்போன், சிகரெட், பீடி பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைதிகள் சொகுசு வசதியை அனுபவிக்க, சிறை வார்டன்களுக்கு கட்டுக்கட்டாக பணம் கொடுக்கும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக சிறையில் கைதிகள் மதுபானம் அருந்தும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது!

0 Comments

leave a reply

Recent News