loader
18 நாட்களில் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியது இந்தியா!

18 நாட்களில் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியது இந்தியா!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பு மருந்துகளுக்கு அவசர கால பயன்பாட்டு அனுமதியை இந்திய அரசு வழங்கியது.

இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கப்பட் டது. டாக்டர்கள், முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக நாடு முழுவதும் மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பு மருந்து பெறுவதற்காக பதிவு செய்தவர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலகிலேயே இந்தியாவில் தான் தடுப்பூசி வேகமாக செலுத்தப்பட்டு வருகிறது. இது வரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

18 நாட்களில் தடுப்பூசி பெறுவதற்காக பதிவு செய்தவர்களில் 40 சதவீத சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 2.40 லட்சம் பேர் தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர்.

நேற்று மாலை வரை 43.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பொது மற்றும் தனியார் பிரிவுகளில் தடுப்பூசிக்காக பதிவு செய்யப்பட்டவர்களில் 47 சதவீதம் பேருக்கு தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவுக்கு முன்பே இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை தொடங்கி விட்டன. இதில் அமெரிக்கா 40 லட்சம் பேருக்கு தடுப்பூசியை செலுத்த 20 நாட்கள் எடுத்துக் கொண்டது. இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் நாடுகள் 39 நாட்களை எடுத்துக்கொண்டது.

இந்தியாவில் 18 நாட்களில் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லட்சத்தீவில் 90 சதவீதம் தடுப்பு மருந்து போடப்பட்டு இருக்கிறது!

0 Comments

leave a reply

Recent News