loader
கோலாலம்பூர் மேடை கலை இயக்கம் ஏற்பாட்டில் நடிப்புப் பயிற்சி பட்டறை!

கோலாலம்பூர் மேடை கலை இயக்கம் ஏற்பாட்டில் நடிப்புப் பயிற்சி பட்டறை!

 

கோலாலம்பூர், ஜன 13-

பிரபல இயக்குனர் எஸ்.டி.பாலா தலைமையிலான கோலாலம்பூர் மேடை கலை இயக்கம் ஏற்பாட்டில், நடிப்புப் பயிற்சி பட்டறை  நடத்தப்பட்டது. 

இப்பட்டறையில் 25 இந்தியர்கள் கலந்து கொண்டனர். மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகம், திரைப்படம் போன்றவற்றில் நடிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு இந்தப் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டதாக எஸ்.டி.பாலா கூறினார். 

பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழாவில், மலேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சகாரியா அப்துல் ஹமிட் , அக்கழகத்தின் வாரிய உறுப்பினர் நடிகர் டேனிஸ் குமார் மற்றும் ரிச்சர்ட் எங் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்!

1 Comments

  • Rocken thinesh
    2021-01-19 13:39:20

    Superb moment thanks for finas and s.t bala sir

leave a reply

Recent News