loader
பொங்கல் செலவுச் சுமையைக் குறைத்த மோகனா மினி மார்க்கெட்!

பொங்கல் செலவுச் சுமையைக் குறைத்த மோகனா மினி மார்க்கெட்!

கோலாலம்பூர் - 12

கோவிட்-19  காலகட்டத்தில், அதுவும் நடமாட்டக் கட்டுப்பாடு (MCO) விதிக்கப்பட்டுள்ள இக்கட்டான சூழலில், பொங்கல் திருவிழாவைக் கொண்டாடவிருக்கிறோம். 

கடும் நிதிச் சுமைக்கு மத்தியில்தான் பலரும் இவ்வருட பொங்கலை எதிர்கொள்கிறார்கள். 

இந்நிலையில், பி 40 பிரிவு மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் அமைந்துள்ள மோகனா மினி மார்க்கெட் உரிமையாளர் டத்தின் தமயந்தி - டத்தோ  ஜெயந்திரன் தம்பதியினர் சுமார் 200 பேருக்கு பொங்கல் பானை மற்றும் பொங்கல் கொண்டாட்டத்திற்குத் தேவையான  அத்தியாவசியப் பொருட்களை  அன்பளிப்பாக வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சரின் சிறப்பு அதிகாரி எம்.யு ராஜா கலந்துகொண்டு, இவர்களின் சேவையைப் பாராட்டினார்.

வர்த்தகத் துறையில் வெற்றி நடை போட்டு முன்னேறி வரும்  டத்தின் தமயந்தி - ஜெயந்திரன் தம்பதியர், தங்களின் வளர்ச்சிக்கான இக்காலகட்டத்தில் சமூகப் பணிகளைச் செய்வது பாராட்டக்கூடிய ஒன்று. 

வரும் காலங்களிலும் மோகனா மினி மார்க்கெட் நிறுவனம் சமூகம் சார்ந்த  நிகழ்ச்சிகளைக் கண்டிப்பாகத் தொடர்ந்து நடத்தும் என, அந்நிறுவனத்தின் இயக்குனர் டத்தின் தமயந்தி ஜெயந்திரன் தெரிவித்தார்!

 

0 Comments

leave a reply

Recent News