loader
நாடு முழுவதும் அவசர நிலை! ஆகஸ்ட் 1 வரை தொடரும் என மாமன்னர் அறிவிப்பு!

நாடு முழுவதும் அவசர நிலை! ஆகஸ்ட் 1 வரை தொடரும் என மாமன்னர் அறிவிப்பு!

பெட்டாலிங் ஜெயா, ஜன 12: இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆகஸ்ட் 1 வரை நாடு முழுவதும் அவசரகால நிலையை மாமன்னர் அறிவித்துள்ளார்.

பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசினுடன் நேற்று திங்கள்கிழமை (ஜன. 11) நடந்த சந்திப்பிற்குப் பிறகு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா இந்த முடிவுக்கு ஒப்புக் கொண்டார்.

கோவிட் -19 பரிமாற்றம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்றும், மத்திய அரசியலமைப்பின் 150 வது பிரிவின் கீழ் அவசரகால நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் மாமன்னர் கருதுவதாக இஸ்தானா நெகாரா காப்பாளர் டத்தோ அகமட் ஃபாடில் ஷம்சுதீன் அறிக்கை வழி தெரிவித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்பு மற்றும் தேசத்தின் நலன்களுக்காகத்தான் இந்தப் பிரகடனம் என அறிவிக்கப்பட்டுள்ளது!

 

0 Comments

leave a reply

Recent News