loader
முள்ளிவாய்க்கால் நினைவகத்தை இடித்துத் தள்ளிய இலங்கை அரசு! மக்கள் கொந்தளிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவகத்தை இடித்துத் தள்ளிய இலங்கை அரசு! மக்கள் கொந்தளிப்பு!

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கி உள்ளதால், யாழ்ப்பாணத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என அங்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்த நிலையில், தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவிடத்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அரசின் செயலுக்கு தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது, அப்பாவி தமிழ் இன மக்கள் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்டதை நினைவுகூறும் வகையில் 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News