loader
கிளந்தான், திரெங்கானு, பகாங் மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

கிளந்தான், திரெங்கானு, பகாங் மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

கோலாலம்பூர், ஜனவரி 6 - கிளந்தான் மாநிலத்தின், பாசிர் மாஸ், ஜெலி, தானா மேரா, மாசாங், கோல குராய் மற்றும் குவா மூசாங் ஆகிய மாவட்டங்களில் வானிலை மோசமடைந்து, தொடர்ந்து கனத்த மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், திரெங்கானு மற்றும் பகாங்கில் உள்ள டூங்கூன் மற்றும் கெமாமான் மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைமை இயக்குனர் ஜைலான் சீமோன் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சரவா மற்றும் சபாவில் கன மழை பெய்யும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கிளந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் கிழக்கு ஜோகூர் பகுதிகளில், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்கு காற்று வீசுவதோடு, 4.5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News