loader
உகானில் WHO ஆய்வு செய்ய சீனா மறுப்பு! சீனா மீது WHO அதிருப்தி!

உகானில் WHO ஆய்வு செய்ய சீனா மறுப்பு! சீனா மீது WHO அதிருப்தி!

ஜெனீவா: உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர் குழு ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு அது அனுப்பி வைக்க முடிவு செய்தது.

இந்தச் சிறப்புக்குழு உகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்யும் என தெரிவித்தது. இந்நிலையில், சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்  அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெட்ரோஸ் அதனோம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வுசெய்ய அங்கு நிபுணர் குழுவை அனுப்ப முடிவுசெய்தோம். ஆனால் நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்காமல் சீன அரசு தாமதித்து வருவது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News