loader
ஜனவரி 13 முதல் இந்தியா முழுக்க தடுப்பூசி! இந்திய அரசு அறிவிப்பு!

ஜனவரி 13 முதல் இந்தியா முழுக்க தடுப்பூசி! இந்திய அரசு அறிவிப்பு!

டெல்லி: இந்தியாவில், பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், வரும் ஜனபரி 13- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, தடுப்பூசிகளை விநியோகம் செய்யய் தயாராக இருப்பதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், அடுத்த 10 நாட்களில் முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்ய தயாராக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறதெரிவிக்கப்பட்டுள்ளது!சென்னை, மும்பை உட்பட  4 இடங்களில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் DCGIபடி, கோவிஷீல்ட் (Covishield) மற்றும் கோவாக்சின் (Covaxin) இரண்டையும் இரண்டு அளவுகளில் நிர்வகிக்க வேண்டும், மேலும் இந்தத் தடுப்பூசிகளை 2-8 டிகிரி செல்சியஸில் சேமிக்க முடியும்.

அதிக ஆபத்துள்ள குழுக்கள் ஏற்கனவே மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பதையும், இந்தக் குழுக்களின் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News