loader
மெட் மலேசியாவின் வெள்ள எச்சரிக்கை!

மெட் மலேசியாவின் வெள்ள எச்சரிக்கை!

கிளந்தான், ஜனவரி 3 : கிளந்தான், திரெங்கானு, பகாங் மாநிலங்களில் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமை வரை கனத்த மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான 'மெட் மலேசியா' எச்சரிக்கை விடுத்துள்ளது.

திரெங்கானுவில் பெசுட், செத்தியு, கோலாநெருஸ், உலு திரங்கானு, கோலாதிரங்கானு, மாராங் மற்றும் டுங்குன் மாவட்டங்கள், பகாங்கில் கேமரன்மலை மற்றும் லிப்பிஸ் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் 'மெட் மலேசியா' அறிவித்துள்ளது.

பேராக்கில் கிந்தா, கம்பார், பாகான் டத்தோ, ஹிலிர் பேராக், பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம் மாவட்டங்கள், சிலாங்கூரில் சபா பெர்னாம், கோலா சிலாங்கூர் மற்றும் ஹுலு சிலாங்கூர் மாவட்டங்களில் மோசமான வானிலையுடன் கூடிய அடை மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஜொகூரில் தங்காக், முவார், பத்து பகாட், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாரு ஆகிய மாவட்டங்களிலும் சபாவில், கோத்தா பெலுட், சண்டாக்கான் மற்றும் கூடாட்டிலும் அதே நிலைமைதான் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News