loader
மலேசியா - சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டம் கைவிடப்பட்டது!

மலேசியா - சிங்கப்பூர் விரைவு ரயில் திட்டம் கைவிடப்பட்டது!


புத்ராஜெயா, ஜனவரி 2 - மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான

சிறப்பு ரயில் திட்டம் தொடரப்படுவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் விரைவு ரயில் திட்டமான எHSR – High Speed Rail திட்டம் கைவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

2020-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் இந்த உடன்படிக்கை முடிவுக்கு வருவதால், இத்திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லது, தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்ற கோவிட்-19 தாக்கமும் இதற்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதால், மலேசிய அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News