loader
போர் இன்னும் முடியவில்லை! அனைவருக்கும் நன்றி! - டாக்டர் நூர் ஹிஷாம்

போர் இன்னும் முடியவில்லை! அனைவருக்கும் நன்றி! - டாக்டர் நூர் ஹிஷாம்

கோலாலம்பூர், டிசம்பர் 31: நாட்டில் தீவிரமடைந்து வரும் கோவிட் 19 பெருந்தொற்றை கையாள்வதற்கு, மக்களும் சுகாதார அமைச்சும் இணைந்து தீவிரமாக செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர் இன்னும் முடியவில்லை. தீவிரமாக உள்ளது. ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் கோவிட்-19 பரவலை சிறந்த முறையில் கட்டுப்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சு தமது கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், பொதுச் சுகாதார வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பொது  SOP நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று டான் ஶ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் கேட்டுக்கொண்டார்.

சுகாதார ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், முன்னிலை பணியாளர்கள் உட்பட 2020 -ஆம் ஆண்டு முழுவதும் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்!

0 Comments

leave a reply

Recent News