loader
சீனாவில் மீண்டும் கொரோனா! தலைநகரில் அவசரநிலை பிரகடனம்!

சீனாவில் மீண்டும் கொரோனா! தலைநகரில் அவசரநிலை பிரகடனம்!

பீஜிங்: சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. அந்த வைரஸின் தாக்கம் தற்போது சற்றுக் குறையத் தொடங்கி உள்ளது. மேலும் கொரோனாவுக்கு மருந்தும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸாகப் பரவி வருகிறது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

தலைநகர் பீஜிங்கில்  21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து பீஜிங்  நகரில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அவசர நிலையை சீனா பிறப்பித்துள்ளது.

புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட 21 கொரோனா வைரஸ் பாதிப்புகள்  சீனாவில் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் திங்களன்று தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் பரவும் பாதிப்புகள் அனைத்தும் லியோனிங் மாகாணத்தில் பதிவாகியுள்ளன என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.நோய் தொடர்பான புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

விடுமுறை காலம் என்பதால் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க சீனா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று விவகாரத்தில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதால் பீஜிங்கில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்றும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

0 Comments

leave a reply

Recent News