loader
எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் கட்சி!

எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் கட்சி!

சென்னை:  ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பை டுவிட்டர் சமூக வலைதளம் மூலமாக கடந்த 3-ஆம் தேதி உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து ரஜினிகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது. என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். அரசியல் மாற்றம் தேவை. கட்டாயம் நிகழும்” என்று கூறியிருந்தார்.

தான் தொடங்க உள்ள கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்தார்.

அண்ணாத்த படப்பிடிப்பை இந்த மாத இறுதிக்குள் முடித்துவிட்டு, ஜனவரி மாதம் முதல் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தற்போது ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் ஓய்வு இல்லாமல் நடித்து வருகிறார்.

புதிதாக தொடங்க இருக்கும் கட்சிக்கு ரஜினிகாந்த் என்ன பெயர் வைக்கப்போகிறார்?, திராவிட கட்சிகளைப் போன்று கழகம் என்று பெயர் வைக்கப்போகிறாரா? அல்லது கட்சி என்று பெயர் வைக்கப்போகிறாரா?, கட்சி கொடி எப்படி இருக்கும்?, அதில் இடம் பெறும் சின்னம் எது? என்ன என்பது குறித்து அனைவரிடமும் எதிர்பார்ப்பு இருந்தது. கட்சி தொடங்கப்படும் தேதியை வருகிற 31-ஆம் தேதி ரஜினிகாந்த் அறிவிக்க இருந்தார்.

இந்த நிலையில் அவர் தொடங்க இருக்கும் புதிய கட்சி பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்றும், அந்த கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தனது கட்சிக்கு ‘பாபா முத்திரை’ சின்னத்தை அவர் கேட்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் டிசம்பர் 31-ஆம்  தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக ரஜினி அறிவித்துள்ள நிலையில், எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்சி தொடங்கும் தேதியை டிசம்பர் 31-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொடுப்பேன் என்ற ரஜினிகாந்த். எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் கட்சி தொடங்க ஆயத்தமாகி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

0 Comments

leave a reply

Recent News