loader
27வது நாளாக கடுங்குளிரிலும் தொடரும் விவசாயிகள் போராட்டம்!

27வது நாளாக கடுங்குளிரிலும் தொடரும் விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி: இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் ஆபத்து உள்ளதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த வித தீர்வுகளும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் 27-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் குளிரின் வீரியம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு கடுமையான குளிர் வாட்டியபோதும் விவசாயிகளின் மன உறுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர்கள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதும், மாற்றுவழிகளைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பதும், போக்குவரத்து நெரிசல்கள் தொடர்வதும் டெல்லி மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. எப்போது இந்தப் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்!

0 Comments

leave a reply

Recent News