loader
அமெரிக்காவில் சைபர் தாக்குதல்! ஆபத்தில் அரசின் முக்கியத் துறைகள்!

அமெரிக்காவில் சைபர் தாக்குதல்! ஆபத்தில் அரசின் முக்கியத் துறைகள்!

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசின் முக்கியத் துறைகளைக் குறிவைத்து பல மாதங்களாக இந்த சைபர் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை, அமெரிக்க அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தாக்குதலால் அமெரிக்காவின்  முக்கிய அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆபத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்து இருக்கிறார்கள்.

இந்த சைபர் தாக்குதலை தடுப்பது மிகவும் சிக்கலானது என அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு முகமை (சி.ஐ.எஸ்.ஏ) கூறியுள்ளது. ரஷியா இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் ரஷியா இதை மறுத்திருக்கிறது!

0 Comments

leave a reply

Recent News