loader
நஜிப் தாயார் காலமானார்!

நஜிப் தாயார் காலமானார்!

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 18: நாட்டின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் ஹுசைனின் மனைவியும், ஆறாவது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தாயாருமான துன் ரஹா மொஹமட் நோவா இன்று காலமானார்.  அவருக்கு வயது 87.

"அம்மா இப்போது இங்கே இல்லை. எங்கள் முழுக் குடும்பமும் மருத்துவமனையில் உள்ளது.

சோகமும் கண்ணீரும் பெருகுகிறது. இதை விவரிக்க வார்த்தைகள் இல்லை" என்று நஜிப் தமது டிவிட்டர் பதிவில் இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 18) தெரிவித்துள்ளார்.

துன் ரஹா 1933 -ல் ஜொகூர், மூவாரில் பிறந்தார்.
இவரது தந்தையார் ஹாஜி நோவா (டான் ஸ்ரீ ஹாஜி முகமது நோவா பின் உமர்), அம்னோவின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

துன் அப்துல் ரசாக்கை செப்டம்பர் 4,1952 அன்று திருமணம் செய்தார்.  இந்தத் தம்பதியருக்கு சிஐஎம்பி வங்கியின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ மொஹமட் நசீர் ரசாக், டத்தோ அகமட் ஜோஹரி, டத்தோ முகமது நிஜாம் மற்றும் டத்தோ மொஹமட் நஜிம் உள்ளிட்ட ஐந்து மகன்கள் உள்ளனர்.

முன்னதாக மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் மற்றும் சுல்தான் நஸ்ரின் ஷா ஆகியோர் மருத்துமனைக்குச் சென்று நஜிப்பிடம் விசாரித்தனர்.

பிரதமர் முகைதீன்த யாசின், அன்வார் இப்ராகிம் மற்றும் பல முக்கியத் தலைவர்கள் தலைவர்களும் நஜிப்பை சந்தித்தனர்!

0 Comments

leave a reply

Recent News