loader
தேசிய கால்பந்து வீரர் நமத் அப்துல்லா காலமானார்!

தேசிய கால்பந்து வீரர் நமத் அப்துல்லா காலமானார்!

 

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 17: முன்னாள் தேசிய கால்பந்து வீரர் டத்தோ நமத் அப்துல்லா  காலமானார்.

குடல் புற்றுநோயினால் அவதியுற்று வந்த அவருக்கு வயது 76.

1972 ஆம் ஆண்டு முன்னாள் ஒலிம்பிக் வீரரருமான டத்தோ நமத், இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 17) மாலை 5.30 மணியளவில் தைப்பிங்கில் உள்ள அவரது மருமகனின் இல்லத்தில் காலமானார்.

அன்னாரது நல்லுடல் சுங்கைப்பட்டாணி, தாமான் பெருடாவில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் நாளை இரவு 9 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

 

0 Comments

leave a reply

Recent News