loader
தாய்மொழிப் பள்ளிகளை மூட சட்டத்தில் இடம் இல்லை!  - சிவக்குமார்

தாய்மொழிப் பள்ளிகளை மூட சட்டத்தில் இடம் இல்லை! - சிவக்குமார்

ஆர். பார்த்திபன்

கோலாலம்பூர்  டிசம்பர்-17

அண்மைய காலமாக தாய் மொழிப் பள்ளிகளை மூடவேண்டும் என சில தரப்பினர் வழக்குத் தொடுப்பதும், அது தொடர்பாகக் கருத்து தெரிவிப்பதும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், அதே சமயம் இந்த நாட்டில் வாழும் பல்லின மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுமாக இருக்கிறது என பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர்  சிவக்குமார் தெரிவித்தார்.

அந்த வகையில் இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும்  தாய்மொழிப் பள்ளிகளின் நிலையைக் கல்வி அமைச்சு விளக்க வேண்டும் என எழுத்துப்பூர்வமாகத்  தாம் கேள்வி எழுப்பியதாக சிவக்குமார் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், நேற்று எழுத்துப்பூர்வமாக அமைச்சர்  முகமாட் ரட்ஷி பதில் அளித்துள்ளார். 

அதில், தேசியக் கல்வி முறை கல்வி சட்டவிதி 1996 (சட்டவிதி 550) விதிகளின் படி தமிழ்ப்பள்ளி மற்றும் சீனப் பள்ளிகள் செயல்பட்டுவருகிறது.

ஆகையால் தாய்மொழிப்பள்ளிகளை  மூடவேண்டும் என்று சிலர் கூறும் கருத்து, அது அவர்களின் சொந்தக் கருத்து. அவர்களின் கருத்து அரசாங்கத்தின் கருத்து அல்ல. அனைத்து தாய்மொழிப் பள்ளிகளும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனை மூடச் சொல்வதற்குச் சட்டத்தில் இடம் இல்லை எனக்  கல்வி அமைச்சு தெளிவு படுத்தியதாக,  இன்று மெட்ராஸ் கேஃபே உணவகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவக்குமார் தெரிவித்தார்.

சட்டவிதிகள் தெரியாமல் யாராவது கருத்து தெரிவித்தால், அவர்களுக்கு விளக்கமளிக்க கல்வி அமைச்சு தயார் என அந்தப் பதில் கடிதத்தில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாட்டில் தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என  இனி கருத்து தெரிவிக்கும் நபர்கள் இந்த நாட்டின் சட்டத்தை மதிக்காமல், ஒற்றுமை மற்றும் அமைதியைச் சீர்குலைக்கிறார்கள் என்பதால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் மற்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர்  கேசவன் ஆகியோர் தெரிவித்தனர்!

0 Comments

leave a reply

Recent News