loader
MCO விதி மீறல்.... 200-க்கும் மேற்பட்டோர் கைது!

MCO விதி மீறல்.... 200-க்கும் மேற்பட்டோர் கைது!

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 16:  MCO உத்தரவை மீறியதற்காக 200 க்கும் மேற்பட்டவர்கள் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்  இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 235 நபர்களில், 233 பேருக்கு  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இருவர் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.

வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பதிவு செய்ய உபகரணங்கள் வழங்கத் தவறியது (82), முகமூடிகளை போடுவதற்கான தவறான வழி (81), சமூக இடைவெளி பேணத் தவறியது (57) மற்றும் பிற குற்றங்களுக்காக (15) பேர் கைது செய்யப்பட்டுள்ளாதாக அவர் தெரிவித்தார்.

ஓபராசி பென்டெங்கின் ஒரு பகுதியாக, 40 சட்டவிரோதக் குடியேறியவர்கள் மற்றும் ஐந்து கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஏழு வாகனங்கள் மற்றும் நான்கு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இஸ்மாயில் தெரிவித்தார்.

மேலும், ஏப்ரல் 20 முதல் டிசம்பர் 15 வரை, நாடு முழுவதும் 7,988 கட்டுமானத் தளங்களை உள்ளடக்கிய கட்டுமான தொழில் மேம்பாட்டு வாரியத்தின் அமலாக்கப் பணியாளர்களால் மொத்தம் 13,953 ஆய்வுகள் நடத்தப்பட்டன.

நாடு முழுவதும் 20 கட்டுமானத் தளங்களை ஆய்வு செய்தனர் என்று அவர் கூறினார்.

ஜூலை 24 முதல், மொத்தம் 87,013 நபர்கள் மலேசியாவுக்குத் திரும்பி வந்து, 74 ஹோட்டல்களிலும் 17 பொதுப் பயிற்சி நிறுவனங்களிலும் தங்க வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மொத்தத்தில், 9,405 நபர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட  வேண்டியிருந்ததாகவும், 532 நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், இதுவரைக்கும் 77,076 நபர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்!

 

0 Comments

leave a reply

Recent News