loader
கொரோனாவால் 7.37 கோடி பேர் பாதிப்பு!

கொரோனாவால் 7.37 கோடி பேர் பாதிப்பு!

வாஷிங்டன்: கொரோனா பெருந்தொற்று உலகின் பல நாடுகளையும் இன்னும் விடாமல் துரத்தி வருகிறது. இந்நோய்க்கு நிரந்தர முடிவு கட்டுவது தடுப்பூசிதான் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே கொரோனா தடுப்பூசியை மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில்,  உலகளவில் 7.37 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 5.17 கோடி பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் 16.40 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  5 கோடியே 17 லட்சத்து 43 ஆயிரத்து 888 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் புதிதாக 1.90 லட்சம் பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,716 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மொத்தம் 1.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3.10 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்!

0 Comments

leave a reply

Recent News