loader
நாட்டையே மாற்றுவோம்! வாய்ப்பிருந்தால் பிரதமர் ஆவேன்! மகாதீர் - துங்கு ரஸாலி புதிய ஆட்டம்!

நாட்டையே மாற்றுவோம்! வாய்ப்பிருந்தால் பிரதமர் ஆவேன்! மகாதீர் - துங்கு ரஸாலி புதிய ஆட்டம்!

 

கோலாலம்பூர், டிசம்பர் 14- நெடுநாள் பிரிந்திருந்த மகாதீர், துங்கு ரஸாலி இணைந்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அரசாங்கத்தில் நீண்ட காலமாக அமைச்சராகவும், பிரதமராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள் என்ற முறையில் நாட்டின் அரசியல், பொருளாதார சிக்கலைத் தீர்க்க தாங்கள் இருவரும் கரம் கோர்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தற்போதுள்ள அரசாங்கம் பெரும்பான்மையில்லாத அரசாங்கம். நிலையில்லாத அரசாங்கம். இலக்கில்லாமல் செயல்படுகிறது. மக்கள் பல வகைகளிலும் சிரமப்படுகின்றனர். அன்றாடம் தொழில் செய்பவர்கள் ஒருநாள் வேலை செய்யாவிட்டால் மறு நாள் மேசையில் உண்ண உணவின்றித் தவிக்கின்றனர். நமது நாட்டில் உணவில்லாமல் யாரும் கஷ்டப்படக்கூடாது.  நமது நாடு எல்லா இயற்கை வளங்களும், செழிப்பும் உள்ள நாடு. நமது நாடு மீண்டும் 'ஆசியாவின் புலி' என்ற பழைய பட்டப் பெயரைப் பெற நாம் பாடுபட வேண்டும் என துங்கு பேசினார்.

நாளை வரவு செலவுத் திட்டம் மீதான 3-வது வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடையலாம் என மகாதீர் தெரிவித்தார்.

வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடைந்தால், அதைத் தொடர்ந்து நடப்பு அரசாங்கமும் பிரதமரும் பதவியிலிருந்து விலக வேண்டும், புதிய அரசாங்கம் அமைய வேண்டும் எனவும் மகாதீர் கூறினார். மேலும் வாய்ப்பிருந்தால் தாமே பிரதமர் ஆகத் தயார் என்றும் கூறினார்.

இன்று தொடங்கும் எங்களின்  பயணம் ஒரு புதிய தொடக்கம் என்றும், நாட்டையே மாற்றியமைப்போம் என்றும் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்!

1 Comments

  • Latchmanan
    2020-12-14 07:06:47

    We don't want there old folks. forget about them. We want a new leader.

leave a reply

Recent News