loader
அடுத்த முதல்வர் அஜித்! விரைவில் அறிவிப்பு!

அடுத்த முதல்வர் அஜித்! விரைவில் அறிவிப்பு!

அஜித் அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் முதல் முறையாக இணைய உள்ளதாகவும், அது 'முதல்வன்-2' என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'வலிமை' எனும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அஜித் அடுத்ததாக பிரமாண்ட இயக்குனருடன் முதல் முறையாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1999-ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த `முதல்வன்` படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.

அஜித் மற்றும் ஷங்கர் இணைந்தால் அது ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக இருக்கும். இயக்குநர் ஷங்கர் கமல்ஹாசனின் 'இந்தியன்-2' படத்தை இயக்கி வந்த நிலையில், சில பல காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News